இலங்கை வட முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 15 மில்லியன் ரூபா செலுத்தினார். மேற்படி தொகையை நிர்ணயம் செய்த முன்னாள் ஜனாதிபதி, உச்ச நீதிமன்றத்தினால் செலுத்தப்பட வேண்டிய முழுத் தொகையான 100 மில்லியன் ரூபாயில் மிகுதி பணத்தை செலுத்த கால அவகாசம் கோரியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், இதுவரை 15 மில்லியன் ரூபாயை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார் என உயர் நீதிமன்றில் பிரேரணை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய தொகையான 85 மில்லியன் ரூபாயை 2024 ஜூன் 30 ஆம் திகதி முதல் வருடத்துக்கு 8.5 மில்லியன் ரூபாய் வீதம் 10 தவணைகளாக செலுத்தப்படும் என அவர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில், எஞ்சியுள்ள இழப்பீட்டை 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் 2033 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 வரை வருடாந்தம் வழங்குவதற்கு அனுமதிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி தனது பிரேரணையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் மாதாந்தம் 97,500 ரூபாய் ஓய்வூதியம் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 54,285 ரூபாயையும் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.