தமிழர்களிற்கு காணி, பொலீஸ் அதிகாரம் கொண்ட 13ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியே ஆக வேண்டும் என தென்னிலங்கை பௌத்த துறவிகள் அடங்கிய மத தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு.
தமிழர்களுக்கு வழங்கப்படவுள்ள அதிகாரப்பகிர்வு தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்களும் அச்சமும் காணப்படுவதால் அதனை நீக்குவதற்காகவே தென்பகுதியில் இருந்து மதகுருமார்கள் யாழிற்கு விஜயம் செய்திருப்பதாக யாழ்ப்பாண சர்வமதக்குழுவின் செயலாளர் அருட்பணி ஜசாக் டானியல் டிக்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும் இதனை தென்பகுதியிலுள்ள சிங்கள மக்களுக்கு எடுத்து கூறவுள்ளதாக தென்பகுதியில் இருந்து வந்த 20 பேர் கொண்ட பௌத்த மதகுருமார்கள் தெரிவித்ததாகவும் யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமதக்குழுவின் செயலாளர் அருட்பணி ஜசாக் டானியல் டிக்சன் குறிப்பிட்டார்.
13வது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு அதற்குரிய அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதனையும் தென்பகுதியில் இருந்து வந்த இந்த 20 பேர் கொண்ட பௌத்த மதகுருமார்கள் ஏற்றுக்கொண்டு
வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு கட்டாயம் வழங்கப்படவேண்டும் என்பதையும் இந்த பௌத்த மதகுருமார்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் யாழ்ப்பாண சர்வமதக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டார்.
தென்பகுதியில் இருந்து வந்த 20 பேர் கொண்ட பௌத்த மதகுருமார்கள் வடமாகாணத்தில் இருக்கின்ற சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பினபோதே யாழ்ப்பாண சர்வமதக்குழுவின் செயலாளர் அருட்பணி ஜசாக் டானியல் டிக்சன் இதனை தெரிவித்திருந்தார்.
இதன் பின்பு மாலை 4 மணியளவில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக கருத்துகளை பகிர்ந்ததனர்.
இந்தப் பயணத்தின்போது 13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால் உள்ள சாதக பாதகங்களையும் கேட்டு அறிந்துகொண்டனர்.
மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள்உள்ளடக்கிய இந்த 20 பௌத்த துறவிகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாண சர்வ மத குழுவின் அழைப்பின் பேரிலேயே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்
13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் மக்களின் நிலைப்பாடு மற்றும் வடக்கு கிழக்கில் எவ்வகையான தாக்கத்தை செலுத்தும் நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் சாதக பாதக விடயங்கள் தொடர்பில் மதத் தலைவர்கள் சமூகமட்ட பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிவதற்காக குறித்த விஜயம் அமைந்துள்ளதாகவும்
காலையில் கியூடெக் அமைப்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள மதத் தலைவர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகள்உடனான விசேட சந்திப்பில் கலந்து கொண்டதோடு அதன் பின்னர் 4 மணிக்கு வட மாகாண ஆளுநர் மற்றும் வடக்கில் செயற்படும் அரச அதிகாரிகளுடன் குறித்தகுழு சந்திப்பில் ஈடுபட்டனர். மத தலைவர்களையும் தனித்தனியாக சந்திக்க உள்ளதாகவும் யாழ்ப்பாண சர்வ மத குழுவின் இணைப்பாளர் அருட்தந்தை டிக்சன் தெரிவித்தார்.
இலங்கையின் மூத்த பீடங்கள் நான்கு 13ஐ அமுல்ப்படுத்த கூடாது என ஜனாதிபதிக்கு மனுக்கொடுத்துள்ள இந்தவேளையில் வேறு பௌத்த குருமார் இக் கருத்தை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TL