146 வருட கிரிக்கெட் வரலாற்றில் Time Out முறையில் ஆட்டமிழந்த மெத்யூஸ்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியில் எஞ்சலோ மெத்யூஸ் ‘Time Out’ (டைம் அவுட்) முறையில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து வெளியேறினார்.
எஞ்சலோ மெத்யூஸ் ஆடுகளத்துக்கு துடுப்பெடுத்தாட வரும்போது உரிய நேரத்துக்குள் (2 நிமிடங்கள்) ஸ்டம்புக்கு வராததால் அவர் ‘Time Out’ முறையில் Run out வீரராக அறிவிக்கப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் இதுபோன்ற ஆட்டமிழப்பு இடம்பெறுவது இதுவே முதல்முறை.
146 வருட வரலாற்றைக் கொண்ட சர்வதேச கிரிக்கெட்டில் டைம் அவுட் செய்யப்பட்ட முதல் துடுப்பாட்ட வீரராக எஞ்சலோ மெத்யூஸ் பதிவானார்.
போட்டி விதிமுறைகளின் பிரகாரம் ஒரு வீரர் தனது இன்னிங்ஸை 2 நிமிடங்களுக்குள் தொடங்க வேண்டும்.
எஞ்சலோ மெத்யூஸ் துடுப்பெடுத்தாட ஆடுகளம் வந்தபோது அவரது ஹெல்மெட்டின் பட்டி கழன்றதால், மாற்று ஹெல்மெட் கொண்டு வரப்படும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த தாமதத்தின் போது, பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷேக்கிங் மேல்முறையீடு செய்ய, நடுவர்கள் பங்களாதேஷுக்கு சாதகமாக தீர்ப்பளித்தனர்.