2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை ஜனவரி 20ஆம் திகதி
2025ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆனால், எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும். இது 2024ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணைக்கு உரியதாகும்.
அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை தொடர்பான பாடசாலை புத்தகங்களும், சீருடைகளும் தயார் நிலையில் உள்ளன.
நாட்டின் நிலவிய சூழ்நிலை காரணமாக, அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.
2023ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். அனைத்து பரீட்சைகளையும், புதுப்பிக்கும் புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளைய தினம் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள பாடசாலைகளை சூழவுள்ள பகுதிகளில் அரசியல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.