Home » 2026 ஜனவரி – ஜூலை வாகன இறக்குமதிக்காக 1,495 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு

2026 ஜனவரி – ஜூலை வாகன இறக்குமதிக்காக 1,495 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு

Source

2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 1,495 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 2,040 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

2026 ஜூலை மாதத்தில் தனிப்பட்ட மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்ளிட்ட வாகன இறக்குமதிக்காக 241 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

2026 ஜூன் மாதத்தில் வாகன இறக்குமதிக்காக 182 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்த நிலையில், ஜூலை மாதத்தில் பதிவான 241 மில்லியன் டொலர் செலவானது மாதாந்த அடிப்படையில் 32% அதிகரிப்பை காட்டுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

The post 2026 ஜனவரி – ஜூலை வாகன இறக்குமதிக்காக 1,495 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both