Home » 2028ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் திட்டம்?

2028ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் திட்டம்?

Source

2028ஆம் ஆண்டில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவது குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக உள்ளகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கும், தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கும் பொதுமக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த வாக்கெடுப்பை நடத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக அரசாங்கத்தின் அதிகாரிகள் அண்டை நாடொன்றின் இராஜதந்திரப் பிரிவினருடனும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக உள்ளகத் தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கை வரலாற்றில் இதுவரை ஒரேயொரு சர்வஜன வாக்கெடுப்பு மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. அது 1982ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் நடத்தப்பட்ட வாக்கெடுப்பாகும்.

அப்போது நடைமுறையிலிருந்த நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கான அனுமதியைப் பெறும் நோக்கில் அந்தச் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

The post 2028ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த அரசாங்கம் திட்டம்? appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both