32 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு ஒலிம்பிக் பதக்கம்.
பரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
அவர் 82.97 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்துள்ளார். அது ஒரு புதிய ஒலிம்பிக் சாதனையாக பதிவாகியுள்ளது.
பாகிஸ்தான் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றுள்ளது. தடகளப் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் வென்ற முதல் ஒலிம்பிக் பதக்கம் இதுவாகும்.
அத்துடன், 40 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் ஒன்றை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.