இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 2024 மார்ச் 31 வரை விசா இன்றி நுழைய அனுமதிக்கும் முன்னோடித் திட்டத்தை இலங்கை அமைச்சரவை அனுமதித்துள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்த விசா விலக்கு இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்குப் பொருந்தும். உடனடியாக அமலுக்கு வரும் என்று அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில எழுதினார்.
“இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஒரு முன்னோடித் திட்டமாக மார்ச் 31 வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் விசா இலவசம் என்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என்று பெர்னாண்டோ பதிவிட்டார்.