தங்காலை, சீனிமோதர பகுதியில் 700 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை கொண்டுவந்ததாகக் கூறப்படும் மீன்பிடிப் படகின் உரிமையாளர், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில், தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் இந்த போதைப்பொருட்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டன.
வெளிநாட்டிலிருந்து டோலர் படகு மூலம் கொண்டுவரப்பட்டு, பின்னர் ஒரு சிறிய மீன்பிடிப் படகு மூலம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சிறிய மீன்பிடிப் படகின் உரிமையாளர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
The post 700 கிலோ போதை பொருள் படகின் உரிமையாளர் கைது appeared first on LNW Tamil.