Home » 9வது பாராளுமன்றத்தில் 167 சட்டமூலங்கள் நிறைவேற்றம்.

9வது பாராளுமன்றத்தில் 167 சட்டமூலங்கள் நிறைவேற்றம்.

Source

கடந்த 9வது பாராளுமன்றத்தின் காலப்பகுதியில் 167 சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் எம்.ஜயலத் பெரேரா தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி தொடங்கிய 9வது பாராளுமன்றம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவில் கலைக்கப்பட்டது.

அந்த காலப்பகுதியில் நிறைவேற்றப்பட்ட 167 சட்ட மூலங்களில், 146 அரச சட்டங்கள் உள்ளன. 21 தனியார் சட்டமூலங்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம், இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலம், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம், தேர்தல் ஒழுங்குமுறைச் செலவுச் சட்டமூலம் ஆகியவையும் அவற்றுள் அடங்கும்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image