நிதி நிறுவனமொன்றில் 990 கோடி ரூபா மோசடி செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி அவர் இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (26) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது குற்றவியல் துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் பண மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நிதி நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் பங்குதாரர் எனவும் சந்தேக நபர் கண்டி வியூகார்டன் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.