டீசல் மற்றும் எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதனால், மின்சார செலவை இரண்டு சதவீதம் குறைக்க முடியும் என சுட்டிக்காட்டல்
டீசல் மற்றும் எண்ணெய்யின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதனால், மின்சார செலவை இரண்டு வீதத்தினால் குறைத்துக் கொள்ள முடியும் என எரிசக்தி நிபுணர் கலாநிதி திலக் சியம்பளாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது நாட்டின் உள்ள மின்சாரத் தேவையில், 25 சதவீதமான மின்சாரம் டீசல் மற்றும் எண்ணெய் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளை பொருத்தவரை ஏற்றுக் கொள்ள முடியாத அளவாகும்;. இது குறித்தத் திட்டத்தை எரிசக்தி நிபுணர்கள் கொண்டு வந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அவை செயற்படுத்தப்படுவதில்லை என்று அவர் தெரிவித்தார். எமது நிலையத்தில் இன்று இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, நிபந்தனைகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்க முடியும் எனவும் சியாம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். மீண்டும் மின் கட்டணம் குறைக்கப்படும் தினத்தை அறிவிப்பதே அந்த நிபந்தனையாகும்.