அடைக்காக்கப்படக்கூடிய இரண்டு லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை
இலங்கையில் மாதாந்த முட்டை உற்பத்தி 30 மில்லியனாக குறைந்துள்ளது. கால்நடை தீவன தட்டுப்பாடும், தாய் கோழிகளின் இறக்குமதி 80 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரமாகக் குறைவடைந்ததுமே இதற்கான காரணமாகும். இதற்கு முன்னர், வருடாந்தம் 80 ஆயிரம் தாய் விலங்குகள் இறக்குமதி செய்யப்பட்டன. தாய் கோழி இறக்குமதி செய்யப்படுமானால், முட்டை உற்பத்தி சுமார் 11 மாதங்களுக்கு தாமதமாகக் கூடும். இதற்கு மாற்றாக, அடைக்காக்கப்படக்கூடிய இரண்டு லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.