நிதித்துறையை டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்
நிதித்துறையை டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார வெற்றிக்கு இதுவே சிறந்த வழி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக பாதுகாப்பு திட்டங்கள், வரி செலுத்துதல், வரி தளர்வு போன்ற அனைத்து பகுதிகளிலும் டிஜிட்டல் மயமாக்கல் பாரிய பங்கை வகிக்க முடியும். இலங்கை அந்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும். அதற்கு டிஜிட்டல் அடையாள அட்டை பிரதானமாக இருக்கும். உட்கட்டமைப்புக்கான கொடுப்பனவுகள் வினைத்திறனாக இருக்க வேண்டும்.
இந்தப் பணிகளுக்காக புதிய விதிமுறைகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.