யாழ்ப்பாணம் கலாச்சார மண்டப கையளிப்பு நிகழ்வில் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகின்றது.
இந்திய அரசினால் இந்திய நாணயத்தில் 100 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபம் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் மண்டபம் யாருக்கு, எவ்வளவு என்பதில் மத்திய அரசிற்கும் மாநகர சபைக்கும் இடையில் பெரும் முரண்பாடு காணப்படுகின்றது.
இந்த நிலையில் 11ஆம் திகதிய கையளிப்பு நிகழ்வில் இந்திய அரசிடம் இருந்து இலங்கை அரசிடம் கையளிக்கும் நிகழ்வு மட்டுமே காட்டப்படும் அதே நேரம் இலங்கை அரசு மாநகர சபையிடம. கையளிக்கும் நிகழ்வும் காட்டப்படாது மாநகர சபையின் பங்களிப்பும் இன்றி நிகழ்வை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதோடு அதற்கான அழைப்பிதழ்களும் இரகசியமாக அச்சிடப்பட்டும் விட்டது.
இதனையறிந்த யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினம் ஆளுநர் மற்றும் புத்தசாசன அமைச்சர்களுடன் உரையாடி மாநகர சபையின் பங்களிப்பை உறுதி செய்தபோதும் அவை மீறுவதாகவே அழைப்பிதழ் இருப்பதனால் இந்த விடயத்தில் தனது எதிர்ப்பையும் தெரிவித்தார்.
இவற்றினையடுத்து நேற்று மாலை அழைப்பிதழ் மாற்றப்பட்டு அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றது.
TL