அடித்தால் திருப்பி அடிப்போம் நீங்கள் அடித்தால் நாங்கள் திருப்பி அடிப்போம். அடிக்க கண்ணத்தை கொடுத்து போட்டு இருக்க நாம் யேசு நாதர் இல்லை என தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவர் சீ.வி.கே்சிவஞானம் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட உள்ளூராட்சி சபை வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று இளங்கலைஞர் மண்டபத்தில் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எம்மை தாக்க நினைத்தால், தாக்கினால் திருப்பித் தாக்குவோம். பதில் சொன்னால் பதில் பறக்கும். இது தேர்தல்கள் காலம். அகிம்சை பாரம்பரிய கட்சி என்பதனை பாரம்பரியத்தோடு பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் உண்டு இருப்பினும் எம்மைத் தாக்கினால் பதிலுக்கு தாக்குவோம். அதனை வேட்பாளர்கள் செய்ய வேண்டாம் அதனை நாம் பார்த்துக்கொள்ளுவோம்.
இன்று எமக்குள்ளேயே அதாவது தமிழ் அரசுக் கட்சிக்குள்ளும் பிரித்து விடலாமா உனச் சிலர் சதி செய்கின்றனர். ஏனெனில் எமது மாறுபட்ட கருத்தை பிறிவினையாக்க முயற்சிக்கின்றனர். இதனால் அவர் சொன்னார் இவர் சொன்னார் என அதிக பதிப்புக்களும் வரும். மிக அண்மையில் நான் கூறியதாகவே ஒரு ஆக்கம் வெளி வந்துள்ளது உண்மையில் அதனை நான் கூறவே இல்லை என்றார்.