கடந்த வருடம் மே மாதம் நாட்டின் கடல் எல்லையில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூலம் நாட்டின் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா தலைமையிலான மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை விரைவில் கிடைக்கப்பெறும் என சமுத்திய சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கைக்கு அமைய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அசேல ருக்கவ தேசிய வானொலிக்கு தெரிவித்தார்.