சுமார் இரண்டு மில்லியன் முட்டைகளை இந்தியாவில் இருந்து நாளை கப்பல் ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் பிரியங்க அத்தபத்து தெரிவித்துள்ளார். இந்த முட்டை எதிர்வரும் திங்கட் கிழமை அளவில் நாட்டை வந்தடையும். இலங்கை இலங்கை அரச வாணிப பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த முட்டை இறக்குமதி செய்யப்படுகிறது. எதிர்வரும் திங்கட் கிழமையின் பின்னர் வாரந்தோரும் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு எதுவித குறையும் இன்றி முட்டையை பெற்றுக் கொடுக்க இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.