இலங்கை மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்றும் சட்ட மூலத்தில் பல்வேறு ஆக்பூர்வமான விடயங்கள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டபிள்யு. எ.சிரிவர்தன தெரிவித்துள்ளார். இதன்மூலம் இலங்கை மத்திய வங்கி நியதிச் சபையாக மாறும் என்றும் அவர் கூறினார். இதனால் எவருக்கும் மத்திய வங்கிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது. மத்திய வங்கியின் நாணய சபைக்கு எதிராக மாத்திரமே இதன்மூலம் வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.