இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க,மின் கட்டண உயர்வை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மீறல் மனுவை (FR) தாக்கல் செய்துள்ளார்.
ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில், அடிப்படை உரிமை மீறல் மனு ஒரு மின்சார நுகர்வோர் என்ற வகையிலும், பொது நலனுக்காகவும் தாக்கல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கட்டண உயர்வு காரணமாக மிகக் குறைந்த அளவிலான மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிறுவப்பட்ட சட்ட நடைமுறைகளுக்கு மாறாக இலங்கை மின்சார சபையால் (CEB) முன்மொழியப்பட்ட கட்டண உயர்வை PUCSL அங்கீகரித்ததாக கூறப்படும் செயல்முறையையும் ஜனக ரத்நாயக்க சவாலுக்கு உட்படுத்துள்ளார்.
கட்டண மாற்றத்திற்கு PUCSL இன் அனைத்து அங்கத்தவர்களதும் ஒப்புதல் அவசியமானது. முன்மொழிவுக்கு வழங்கப்பட்ட ஆவணத்துக்கு ஆணைக்குழுவில் அத்தகைய சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், ஆணையம் வழங்கியதாகக் கூறப்படும் ஒப்புதல் மூன்று உறுப்பினர்களின் சட்ட விரோதமான முடிவு என்றும் ஆணையத்தின் முடிவு அல்ல என்றும் அவர் கூறுகிறார்.
N.s