வடகொரியா மீண்டும் அனுவாயுத சோதனை நடத்த தயாரிகிவருகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. வடகொரியா மீண்டும் அனுவாயுத சோதனை நடத்தும்; பட்சத்தில் அது பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அமெரிக்க அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்திருக்கிறார். உலக நாடுகளின் எச்சரிக்கையினை பொருட்படுத்தாது கடந்த ஒரு வருட காலமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகனை பரிசோதனைகளை நடத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகளை பரிசோதித்து அமெரிகா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.