அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முயற்சிக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு நாட்டை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். தொழிற்சங்கங்களின் தற்போதைய தேவை அரசியல் நிகழ்ச்சி நிரலாகும். அதனை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கின்றன. அடிப்படையற்ற தொழிற்சங்கங்களின் நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் தேவையற்ற சிரமங்களுக்கு உள்ளாவதுடன் அரசாங்கம் முயற்சிக்கும் அபிவிருத்திக்கும் தடைகளை ஏற்படுத்துகின்றன. பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் அபிவிருத்தியையும் அது பெரிதும் பாதிப்பாக அவர் குறிப்பிட்டுள்ளார்.