சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் நாளைக் கிழமை காலை அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், இந்த கடன் வசதியை வழங்குவது தொடர்பான, நிதியத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 22ஆம் திகதி முதல், இலங்கைக்கு 8 தவணைகளின் கீழ் 2 தசம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி கிடைக்கும்.
நீடிக்கப்பட்ட கடன் வசதி குறித்து ஆலோசிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பான தீர்மானங்களை அறிவிக்கும் வகையில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றும் நடத்தப்பட உள்ளது. சூம் தொழில்நுட்பம் மூலம் இலங்கைக்கும் இதில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.