சர்வதேச நீர் தினம் இன்றாகும். உலக சனத்தொகையில் 220 கோடி பேர் சுத்தமான நீர்வசதிகள் இன்றி சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள். இவ்வாறான நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை 1998ஆம் ஆண்டில் உலக நீர் தினத்தை பிரகடனம் செய்தது. உலகின் மூன்றில் இரண்டு பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. ஆனால், மனித நுகர்விற்கு தசம் ஒரு சதவீதமான நீரை மாத்திரமே பயன்படுத்தக்கூடிய நிலை காணப்படுவதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். உலகில் மிகச்சிறந்த நீர்ப்பாசன நாகரீகத்தைக் கொண்ட நாடாக இலங்கை திகழ்கிறது என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். உலக நீர் தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு துளி நீரேனும் வீணாக கடலுடன் சேரக்கூடாது என்பதில் முன்னோர்கள் உறுதியாக இருந்தார்கள் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.