அரச சேவையில் பணியாற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 341 பரீட்சைம த்திய நிலையங்களில் இந்தப் பரீட்சை இடம்பெறவிருக்கின்றது. தேசிய, மாகாண பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை மதிப்பீடு செய்து பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய உரிய நியமனங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து ஏற்படும் வெற்றிடங்களுக்கு மாகாணங்களின் ஊடாக பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிறேமஜயந்த எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.