நாட்டின் நிதி ஸ்திரத் தன்மைக்கான திட்டமிட்ட வேலைத்திட்டம் அமுலாவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தின் மூலம் நாட்டின் பணவீக்கம் 70 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. இதனை இந்த வருட இறுதிக்குள் 5 சதவீதம் வரை குறைப்பது இலக்காகும் என்று அவர் கூறினார். எமது நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற தசதெசின் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர் கருத்து வெளியிட்டார். வங்கிக் கட்டமைப்பை ஒழுங்குறுத்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது மத்திய வங்கியின் இலக்காகும். மக்களுக்கு பொருத்தமற்ற நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை தடுப்பது இலக்காகும் என்றும் மத்திய வங்கியின் ஆளுனர் மேலும் தெரிவித்தார்.