QR ஒதுக்கீட்டை பராமரிக்க தவறிய 40 எரிபொருள் நிலையங்களின் செயல்பாடு இடைநிறுத்தம்
தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான QR ஒதுக்கீடுகளை தொடர்ச்சியாக கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) நிர்வாகம் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் இன்று காலை நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் கொள்ளளவில் ( stock tank) குறைந்தபட்சம் 50 சதவீதத்தை பராமரிக்க வேண்டும். ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஜிபிஎஸ் கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்படும் என்றும், அதன்பிறகு அனைத்து தனியார் நிரப்பு நிலையங்களிலும் இந்தமுறைமை செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
N.S