கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அடியார்கள்; இன்று புனித வெள்ளியை அனுஷ்டிக்கிறார்கள். இயேசுவின் பாடுகள், மரணம் என்பவற்றை இன்றைய நாளில் தியானிக்கிறார்கள்.
புனித வெள்ளி தினத்தில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் உண்ணா நோன்பிருந்து இறைவேண்டல் செய்வார்கள். தவக்காலத்தின் இன்றைய, இறுதி திருச்சிலுவைப் பாதையிலும் அடியார்கள் கலந்து கொள்வார்கள்.
தவக்காலம் என்பது, 40 நாட்களை உள்ளடக்கியதாகும். இது சாம்பல் புதன் என அழைக்கப்படும் திருநீற்று புதனுடன் ஆரம்பமானது. தவக்காலத்தின், புனித வாரம், கடந்த குருத்தோலை ஞாயிறுடன் ஆரம்பமானது.
நேற்றைய தினம் புனித வியாழன் ஆகும். புனித வார வழிபாடுகள்;; மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதணைகளை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டு ஸ்தலங்களுக்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.