Home » தலைவர் பிரபாகரனும் குடும்பமும் உயிருடன் உள்ளனர்! ச.வி. கிருபாகரன் – TCHR

தலைவர் பிரபாகரனும் குடும்பமும் உயிருடன் உள்ளனர்! ச.வி. கிருபாகரன் – TCHR

Source

கொழும்பு ஊடகமொன்றுக்கு முன்னாள் இந்திய கடற்படை கமாண்டோ பேராசிரியர் எமரிட்டஸ் எம். சுப்ரமணியம் 13 செப் 2015 அன்று வழங்கிய நேர்காணல், “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் – தெற்கின் ஞாபக மறதியைக் கூறுகிறது” என்ற தலைப்பில் 2023 பெப்ரவரி 24 ஆம் திகதி, வெளியான எனது ஆங்கில கட்டுரை, அத்துடன் “பேயாட்டம், சூதாட்டம், போராட்டம், களியாட்டம்” என்ற தலைப்பில் 19 பெப்ரவரி மாதம் 2023ம் அன்று, தினக்குரலில் வெளியான தமிழ் கட்டுரை, மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது அளித்த பதில் ஆகியவற்றின் அடிப்படையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள பல விடயம் தொடர்பில் திறந்த ஒரு சவாலை முன்வைக்குமாறு என்னை தூண்டியுள்ளது.

கடந்த ஜூலை மாதம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்தும், அவரது மரபணு பரிசோதனை குறித்தும் – டிஎன்ஏ குறித்தும், ஊடகவியலாளர் ஒருவர் சிறிசேனவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

யாதார்த்தம் என்னவெனில், 2009 மே மாதம் போரின் கடைசி இரண்டு வாரங்களும், மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சராக கடைமை ஆற்றியிருந்தார். ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த சிறிசேனா, பிரபாகரனின் மரணம் குறித்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், அவரது மரபணு பரிசோதனை டிஎன்ஏ குறித்து தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

சிறிசேனா ஜனாதிபதியாக இருந்தவேளையில், இவர் ராஜபக்சா குடும்பத்தினரால் அச்சுறுத்தப்பட்ட போதெல்லாம், ‘சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன்’ என்று பல சந்தர்ப்பங்களில் சிறிசேனா கூறியது என் நினைவிற்கு வருகிறது. அது என்ன என்பதை இப்போது நாம் புரிந்து கொள்ளலாம்.2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவடைந்த போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாக போரின் கதாநாயகர்கள் என அழைக்கப்படுபவர்கள், பிரபாகரனின் சடலத்தை கண்டு எடுத்துள்ளதாக ஊடகங்களிற்கு கட்சிபடுத்தியிருந்தார்கள். ஆனால் உண்மை என்னவெனில், அவ்வேளையில் பிரபாகரனின் இளைய மகன், பாலச்சந்திரன் (12) இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டது என்பது யாவரும் அறிந்த உண்மை.இருப்பினும், தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பத்தினர் சிலரும், உயிருடன் இருப்பதாக ஆரம்பம் முதலே தகவல் வந்தது கொண்டிருந்தது.

ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் – குறிப்பாக மஹிந்த, கோத்தபாய அத்துடன் சரத் பொன்சேகா, கமல் குணரத்ன மற்றும் இராணுவப் பேச்சாளர் ஆகியோர் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை என்றும், இந்த குடும்பம் உயிருடன் இருப்பதாக யாராவது நினைத்தால், அது கேலிக்குரிய விஷயம் என்றும் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்ததுள்ளது. எனது அறிவுக்கும் திறனுக்கும் எட்டிய வரையில், இது முற்றிலும் உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ள அரசியல் அறிக்கை.சிறிலங்கா போரை வென்றதுவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலஙகா – சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான், வடகொரியா, அமெரிக்கா போன்ற சில நாடுகளின் வலுவான உதவியுடனும் ஆதரவுடனும் வெற்றி பெற்றது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் 17 மே 2009 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், – “எங்கள் துப்பாக்கிகளை மௌனமாக்க முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றிலிருந்து விடுதலைப் புலிகளின் உண்மையான தலைமையினால், இன்றுவரை எந்த அறிக்கையும் வெளிவந்தது கிடையாது. ஆனால் விடுதலைப் புலிகளின் காகித தாளை விசமத்தானமாக சில கைக்கூலிகளால் பயன் படுத்தப்பட்டதிருந்ததை யாவரும் அறிவார்கள். இதற்கான பின்ணனி யார் என்பதும் யாவருக்கும் தெரியும்.முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமை ஆர்வலராகவும், பாதுகாவலராகவும் இருந்து வரும் என்னால், தலைவர் பிரபாகரனின் குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை என்று கூறும் இந்த அப்பட்டமான பொய்களும் ஏமாற்றுதல்களும் பொதுமக்களிடம் பரவ அனுமதிக்க முடியாது.

மனித உரிமைக் கல்வியானது, வாழும் நபர்களை / மக்களை இறந்துவிட்டதாகக் கூறுவதற்கு கற்பிக்க படவில்லை. தலைவர் பிரபாகரனின் குடும்பம் நலமுடன் வாழும் போது, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை எப்படி ஒப்புக்கொள்வது?இந்த விவகாரம் தொடர்பாக, இலச்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களுடன் பிரபலமான சில தமிழ் ஊடகங்களில் நேர்காணல்களை நடத்தியுள்ளேன். அந்தப் பேட்டிகளில் பிரபாகரனின் குடும்பம் உயிருடன் இருப்பதாக சொல்லியிருக்கிறேன். மேலும், நான் அவர்களுடன் தொடர்பில் உள்ளேன் என்று கூறியுள்ளேன்.மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஐ.நா மனித உரிமைகள் மன்றங்கள் மற்றும் பிற மன்றங்களுடன் பணிபுரிந்துள்ள என்னால், எந்த மனித உரிமை அமைப்போ அல்லது ஆர்வலர்கள், மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்திற்கு, தலைவர் பிரபாகரனோ அல்லது இவரது குடும்பத்தவரோ இறந்தோ அல்லது காணமல் போனதாக எந்த மனுவையோ அறிக்கையையோ சமர்ப்பிக்கப்பட்டதாக எந்த தகவலும் கிடையாது.மகன் பாலச்சந்திரன் ஆனால் – இவரது இளைய மகன் பாலச்சந்திரன், சிறிலங்காவின் இராணுவத்தினால் தன்னிச்சையாக கொல்லப்பட்டார் என்பது நன்கு அறிவிக்கப்பட்டு, ஐ.நா. உட்பட பல முக்கிய நிறுவனங்களில் பதிவாகியுள்ளது.

இதை பல மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஓர் போர்க்குற்றச் செயலாக கண்டனம் தெரிவித்தனர்.மனித உரிமை விடயத்தில் கற்பிக்கும் பாடங்களில் ஒன்று – “ஜனநாயக சமூகத்தில், பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் கூட, தங்கள் மனித உரிமைகளை அனுபவிக்க உரிமை உண்டு”. அப்படியானால், தலைவர் பிரபாகரனை ஒரு பயங்கரவாதி என ஒரு விவாதிற்காக எடுத்து கொண்டால், சிறிலங்காவில் பிறர் அனுபவிக்கும் அதே மனித உரிமைகளை அவரும் அவரது குடும்பம், அவரது உறுப்பினர்களும் அனுபவிக்க உரிமையுண்டு.17 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், ‘பயங்கரவாதம்’ மற்றும் “பயங்கரவாதி” என்ற சொற்பதம் 1970ம் ஆண்டின் பிற்பகுதியில் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதே காலகட்டத்தில் ‘அரச பயங்கரவாதம்’ என்ற என்ற சொற்பதம் பயன்பாட்டுக்கு வந்ததுள்ளது. ஜனதா விமுக்கி பெரமுனையின் கிளர்ச்சி – ஜே.வி.பி., 1971 இல் முழு நாட்டையும் கைப்பற்ற, ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தியவர்களை “கிளர்ச்சிகாரர்” என்ற முத்திரை குத்தப்பட்டது. அதேசமயம் ஐ.நா உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகளின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமது இன அடையாளத்துக்காகவும், சுயநிர்ணய உரிமைக்காகவும் ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களுக்கு பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டது.

போரில், பயங்கரவாதத்திற்கும் கிளர்ச்சியாளர்க்கும் இடையே அதிக வேறுபாடுகள் இல்லை.கேள்வி என்னவென்றால்: ‘கோத்தா போர்’ என்று அழைக்கப்பட்ட போரின் வேளையில், இவர்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதித்தார்களா? போரின் இரண்டு முக்கிய கூறுகள் ஜுஸ் அட் பெல்லம் (Jus ad bellum ) மற்றையது ஜஸ் இன் பெல்லோ (Jus in bello). ஜுஸ் அட் பெல்லம் எனப்படும் போர் உரிமை, ஒரு யுத்தத்தில் எப்படியாக நாடலாம் அல்லது பொதுவாக ஆயுதப் படையைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. ஜஸ் இன் பெல்லோ என்ற போர் நடத்துதல் – போர் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதற்கான நியாயத்தன்மை, ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினரின் நடத்தையை ஒழுங்குபடுத்துகிறது. இவை 1945 ஐ.நா சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் முக்கிய கூறுகளாகும்.பிரபாகரனின் போலி உடல்இவ் காரணிகளைக் கருத்தில் கொண்டு, தலைவர் பிரபாகரன் என்று பொதுமக்களுக்குக் காட்டப்பட்ட போலி உடல் என்ன ஆனது? இந்த கேள்விக்கு சிறிலங்கா பதிலளிக்குமா? பயங்கரவாதிகளுக்கும் மனித உரிமைகளை அனுபவிக்க உரிமை உண்டு என்பதை இங்கு மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன்.

இதேவேளை விடுதலைப் புலிகளின் போராளிகள், பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டு அவர்களது சடலங்களை வன்னி நிலப்பரப்பில் எங்கும் வீசப்பட்டவர்கள் குறித்தும் இதே கேள்வியை முன்வைக்கிறேன்.சர்வதேச மனிதாபிமான சட்டத்தால் விதிக்கப்பட்ட பொதுவான கடமைகள், வழக்கம், மற்றும் ஒப்பந்தம் ஆகியவை பற்றி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் கூறப்பபட்ட விதிமுறைகள் சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

* மோதலில் ஈடுபடும் தரப்பினர், இறந்தவரின் உடலை தாங்கள் சார்ந்த கட்சியின் வேண்டுகோளிற்கு அமைய, அவர்களது உறவினரின் வேண்டுகோளிற்கு அமைய, இறந்த உடலை திரும்பப் பெறுவதற்கு உதவ வேண்டும். அவர்களது தனிப்பட்ட உடமைகளை அவர்களது உறவினர்களிற்கு திருப்பி கொடுக்கபட வேண்டும்.

* இறந்தவர்களை மரியாதைக்குரிய முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும். மற்றும் அவர்களின் கல்லறைகள் மதிக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

* இறந்தவர்களை அடையாளம் காணும் நோக்கில், மோதலில் ஈடுபடும் ஒவ்வொரு தரப்பினரும் அகற்றப்படுவதற்கு முன்னர், கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் பதிவுசெய்து கல்லறைகளின் இருப்பிடத்தைக் குறிக்க வேண்டும்.முள்ளிவாய்க்காலில் ராஜபக்சாக்கள்…….2009 மே மாதம் முள்ளிவாய்க்காலின் போது இந்த சர்வதேச விதிமுறைகளின் அடிப்படைக் கடமைகளை சிறிலங்கா மதித்ததா? முள்ளிவாய்க்காலில் ராஜபக்சாக்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை இப்போது சாதாரண மக்கள் கூட புரிந்து கொள்ள முடிகிறது. அந்த சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநிலைகள் அனைத்தும் புறக்கணிக்கப்படும் பொழுது, அவை வெளிப்படையாக போர்க்குற்றம் மற்றும் இனச் சுத்திகரிப்பு என்று கருதப்படுகிறது.மே 2009 இல் சிறிலங்காவால் இறந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட சில உயர்மட்ட விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களை சந்தித்துள்ளேன். என்னால் சந்திக்கப்பட்ட நபர்களின் பெயர்கள், ஐ.நா. காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்காணிக்கும் பிரிவிற்கோ, அல்லது தன்னிச்சையான கொலைகளை கண்காணிக்கும் பிரிவிற்கோ யாரும் கொடுத்தது கிடையாது.

ஆனால் சிறிலங்கா அரசை திருப்பதிபடுத்துவதற்காகவும், தமக்கு ஓர் கௌரவத்தை தேடுவதற்காகவும், தமிழ் புலன் பெயர்ந்த மேதாவிகள் சிலர், விழாக்கள் எடுத்தும், விளக்குகள் ஏற்றி தமது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றியுள்ளார்கள். ராஜபக்சக்கள் போலியான புகைப்படங்களைக் காண்பித்து வாக்குகளைப் பெற்று, இன்று தமது மானம் மரியாதை காற்றில் பறக்க விட்டுள்ளார்கள். போலி உடல்களின் புகைப்படங்களை காண்பித்த உண்மையை, இராணுவம் மற்றைய படைகளில் உள்ள பல உறுப்பினர்களுக்கு, நன்கு தெரியும். ஆனால் அவர்கள் வாய் திறக்க முடியாத நிலையில் உள்ளார்கள்.முள்ளிவாய்க்கால் போரிலோ அல்லது விடுதலை போராட்ட காலத்தில் கொலை செய்யப்பட்டும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட பொதுமக்களைப் பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை என்பதை யாவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பதிக்கப்பட்ட பெரும்பாலானரின் விடயங்கள் யாவும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பிரிவு, சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை பேரவை ஆகியவற்றால் ஒழுங்காக பரீசிலிக்கப்பட்டு கையாளப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடதக்கது. இவை அனைத்தையும் ஆய்வு செய்து, சட்ட ஆலோசனைகள் பெற்ற கொண்டதன் அடிப்படையில், ராஜபக்சவின் குடும்பத்தினரில் விசேடமாக – மகிந்த, கோத்தபாய மற்றும் சரத் பொன்சேகா, கமல் குணரத்தின, இராணுவப் பேச்சாளர் ஆகியோருக்கு, என்னால் தலைவர் பிரபாகரனும் அவரது குடும்பத்தில் உள்ள சிலரும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை சட்ட ரீதியாக நிரூபிக்க முடியுமென சவால் விடுகின்றேன்.

அத்துடன், இறந்துவிட்டதாக சிறிலங்காவினால் அறிவிக்கப்பட்ட சில விடுதலைப் புலிகளின் தளபதிகளையும் என்னால் காண்பிக்க முடியுமென்பதை இங்கு கூற விரும்புகிறேன். சர்வதேசத்தின் முன்னிலையில் இந்த சவாலை நான்கு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே என்னால் ஏற்று கொள்ள முடியும். ஒன்று, இங்கு பெயரிட்டவர்கள் மட்டுமே சவாலுக்கு முன்வர முடியும். இரண்டாவதாக, இது சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமான நிறுவனங்கள் மற்றும் சில பெரியவர்களின் முன்னிலையில், அதாவது சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும். மூன்றாவதாக, அவர்கள் வாழ்கிறார்கள் என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில், சவாலை ஏற்றுக்கொண்டவர்கள், யாரை இறந்ததாக பறை சாற்றினார்களோ, அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கொள்கைக்கு ஆதரவாக அந்த நேரத்திலிருந்து வேலை செய்வதற்கு முன்வர வேண்டும்.

இறுதியாக, சவாலில் தோற்றவர் இந்த மைல்கல்லின் செலவை ஏற்க வேண்டும். நான் இந்த நிமிடத்திலிருந்து என்றும் சவாலுக்கு தயாராக இருக்கிறேன். மேல் கூறப்பட்ட ஒருவர் அல்லது அனைவரும் இந்த நான்கு நிபந்தனைகளையும் ஒப்புக் கொள்ளும் நிலையில், சர்வதேச பார்வையாளர்கள் மூலம் சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டு, நாம் சவாலில் கூறப்பட்ட விடயங்களை மேற்கொள்ள முடியும். இவர்களின் பதிலை ஆவலுடன் எதிர் பார்த்திருக்கிறேன்.

பயங்கரவாதத்தைப் பொறுத்த வரையில், பயங்கரவாதி என்று உலகில் அழைக்கப்பட்ட பலர் இறுதியில் நாட்டின் தலைவரானார்கள். அதேவேளை அவர்கள் நோபல் பரிசையும் பெற்றிருப்பதையும் அனுபவ ரீதியாக பார்க்கிறோம். இதற்கு இரண்டு நல்ல உதாரணங்கள் – தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா மற்றும் பாலஸ்தீனிய அரசின் யாசர் அராபத்.பயங்கரவாதம்சிறிலங்காவில் இன்று பயங்கரவாதம் என்ற பதம் ஒரு நகைச்சுவையாக பாவிக்கப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்ததிலிருந்து இன்று வரை வடக்கு, கிழக்கில் நடப்பவை அனைத்தும் சாத்வீக செயற்பாடுகள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அரசியலைப் பொறுத்தவரை, பாதுகாப்புப் படையினரைத் தவிர வேறு யாரும் ஒரு தோட்டா கூட பாவித்தது கிடையாது. ஆனால், தெற்கில் வாக்கு வங்கியைக் குறிவைக்கும் தீவிர அரசியல்வாதிகள், இரவும் பகலும் பயங்கரவாதத்தை தமது அரசியல் துரும்பாக பாவிக்கிறார்கள்.1948 முதல் 70களின் ஆரம்பம் வரை சுயநிர்ணய உரிமைக்காவோ, சம உரிமைக்காகவோ அகிம்சை வழியில் போராடிய தமிழ்த் தலைவர்களும் அங்கத்தவர்களான – தமிழ் காங்கிரஸ் தமிழரசு கட்சியில் அன்றைய உறுப்பினர்கள், பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தப்படாதது தப்பினார்கள். காரணம், அந்தக் காலகட்டங்களில் தெற்கின் தீவிர அரசியல்வாதிகளான சரத் வீரசேகர, விமல் விரவன்ச, உதய கம்பீல மற்றும் சிலர் அரசியலில் இருந்திருக்கவில்லை.

இல்லையேல் அன்றைய தமிழ் தலைவர்களான – தந்தை எஸ்.ஜே.வி செல்வநாயகம் மற்றும் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகியோரும் இவர்களினால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டடிருப்பார்கள்.இந்த தீவிர அரசியல்வாதிகளை குறை சொல்ல முடியாது. இவர்களுக்கு சிவில், அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் பற்றிய எந்த அறிவும் கிடையாது. இவர்களும் சில தமிழ் அரசியல்வாதிகளைப் போல், தேர்தல் மற்றும் வாக்கு வங்கி நோக்கிய கபட நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

சகல காரணிகளையும் கவனத்தில் கொண்டு, தென்னிலங்கை அரசியல்வாதிகள் தொடர்ச்சியான குழப்பங்களை அப்பாவி மக்களிற்கு கொடுக்காது, சகலரும் அமைதியுடனும் கண்ணியத்துடனும் வாழ அனுமதிப்பார்களென என்று நம்புகிறேன்.

(முடிவு)ச. வி. கிருபாகரன்

பொது செயலாளர்

தமிழர் மனித உரிமைகள் மையம் – TCHRபிரான்ஸ்

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image