மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
மின்சார சபையின் ஊழியர்களை பணி இடைநிறுத்தம் செய்யுமாறும், மின்சார சபையின் சேவைகளை சீர்குலைக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மின்சார சபை தலைவருக்கு கடிதமொன்றின் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபையை 6 பிரிவுகளாக பிரிப்பது தொடர்பிலான உத்தேச சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறுமாறு இதன்போது போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.