இளையராஜாவின் மகள் பவதாரிணியின் சடலம் இன்று தமிழகம் கொண்டு செல்லப்படுகிறது
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (25) இரவு காலமானார்.
அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இளையராஜாவின் இசையில் பாரதி திரைப் படத்தில் :மயில் போலப் பொண்ணு ஒன்னு’ என்ற பாடலை பாடியதற்காக இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
பவதாரணியின் உடல் கொழும்பு – பொரளை ஜெயரட்ன மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிற்பகல் 1.30க்கு அவரது உடல் சென்னைக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளது.