மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்தி கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (19) உத்தரவிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வேறொரு தரப்பினருக்கு வழங்கியமை தொடர்பாக தினியாவின் கட்டுப்பாட்டு உரிமையாளர்கள் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் இந்த வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது.
நேற்று, அஜித் நிவார்ட் கப்ரால், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதால், இந்த வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியதையடுத்து, அந்தக் கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான் திலின கமகே, 100 சரீரப் பிணையில் மார்ச் 02 அன்று வரை வெளிநாட்டு பயணத்தடையை நீக்கி உத்தரவு வழங்கினார்.