சபாநாயகருக்கு எதிரான பிரேரணையில்கையொப்பம் திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது.
நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நிறைவேற்றும்போது மேற்படி சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தப் பரித்துரைகளை சபாநாயகர் சரியாக அமுல்படுத்தாமை, அரசமைப்பு, நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறுதல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக்கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற சந்திம வீரக்கொடி , ஷான் விஜயலால் டி சில்வா ஆகியோர் கையொப்பம் இட்டனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும் இதில் கையொப்பமிட்டார்.