யாழில் இன்று விமானப் படைக் கண்காட்சி!
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
மேலும் குறித்த கண்காட்சியானது எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நடைபெறுமெனவும் இதன்போது விமானப் படையின் சாகச நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்பன நடத்தத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இக் கண்காட்சியினை பாடசாலை மாணவர்கள் இலவசமாகப் பார்வையிட முடியும் எனவும் ஏனையோருக்கு நுழைவுக் கட்டணமாக 100 ரூபாயை அறவிடத் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துமட்டுமில்லாது இக் கண்காட்சியின் முடிவில், ஜெட் விமான இயந்திரமொன்றை விமான படையினர் யாழ். பல்கலைகழகத்திற்கு அன்பளிப்பு செய்யவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.