மத்திய வங்கி சம்பள அதிகரிப்பை இரத்து செய்யும் பிரேரணை கையளிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் கொண்டுவரப்பட்ட தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேரணை இன்று (13) பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக கொண்டுவரப்படுகிறது.
மத்திய வங்கியின் தன்னிச்சையான சம்பள அதிகரிப்பை இரத்துச் செய்வதும், மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சரின் அனுமதியை கட்டாயமாக்குவதும் இதன் நோக்கங்களாகும்.
இந்த தனிப்பட்ட பிரேரணையை ஏற்றுக்கொண்ட பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி சட்டமா அதிபரின் கருத்தைப் பெறுவதற்காக இந்த சட்டமூலம் உடனடியாக சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.