Home » கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்

Source

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நேற்று (01) பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த விசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக 2012 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒன்லைன் விசா வசதி குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் மேற்பார்வையிடப்பட்டது.

இதனால், சார்க் நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 30 நாள் விசா கட்டணமாக 20 அமெரிக்க டொலர்களும் மற்ற நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 50 அமெரிக்க டொலர்களும் வசூலிக்கப்பட்டது.

இந்த வருமானம் முழுமையாக இலங்கைக்கே பயன்படுத்தப்பட்டதுடன், மிகக் குறுகிய காலத்திற்குள் சுற்றுலாப் பயணிகளுக்கு ON ARRIVAL VISA வழங்குவதற்கு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் இரு தினங்களுக்கு முன்னர் இம்முறையை அமுல்படுத்துவதை மூன்றாம் தரப்பினருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இதன்படி, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து இதுவரை அறவிடப்படாத சேவைக் கட்டணம் மற்றும் வசதிக் கட்டணமும் இந்த நிறுவனத்தின் ஊடாக விசா வழங்குவதற்கு அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விசா கட்டணத்துடன், சார்க் நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மேலும் 22 அமெரிக்க டொலர்களும், மற்ற நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா கட்டணத்துடன் கூடுதலாக 25 டொலர்களும் தற்போது அறவிடப்படும்.

மேலும் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து விசா கட்டணத்தில் இருந்து விலக்கு பெற்ற சுற்றுலா பயணிகளிடம் இருந்து இந்த நிறுவனம் 22 அமெரிக்க டொலர்களை இந்த நாட்டிற்கு வருவதற்கு முன்பு வசூலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தியதால், நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image