ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல தயார் என பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக இன்று (29) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.
மக்களின் வாக்குரிமையை பறிக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், பாலித ரங்கே பண்டாரவின் கருத்துக்கு எதிராக கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அச்சம் காரணமாக அரசாங்கம் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருவதாகவும், இலங்கை அரசியலமைப்பின் மூலம் மக்களின் இறையாண்மை நேரடியாக பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலை பிற்போட முயற்சித்தால் அதற்கு எதிராக பொதுமக்களை திரட்டி சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.