சம்பந்தனின் பூதவுடலுக்கு கிழக்கு ஆளுநர் அஞ்சலி. இறுதிக் கிரியை ஞாயிறன்று திருமலையில்
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று அஞ்சலி செலுத்தினார்.
இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பு – பொரளை ரேமன்ட் மலர்சாலையில் இன்று (02) வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அஞ்சலியின் பின்னர் பாராளுமன்றத்திற்கு அன்னாரது பூதவுடல் நாளை புதன் (03) கொண்டு செல்லப்படவுள்ளது.
அதன் பின்னர், இரா.சம்பந்தனின் பூதவுடல் அவரது சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிக்கின்றார்.