ருமேனியா,போலந்துக்கு செல்கிறார் அலி சப்ரி
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை ருமேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை, ருமேனியா தலைநகர் புக்கரெஸ்டில் புதிய இலங்கைத் தூதரகத்தை வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார். அங்கு 2023 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தனது தூதரக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.