இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்துமாறு ஈரானின் ஆன்மீகத் தலைவர் உத்தரவு சர்வதேச ஊடகங்கள் தகவல்
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்துமாறு ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி கமெய்னி உத்தரவிட்டுள்ளதாக மூன்று அதிகாரிகளை ஆதாரம் காட்டி நிவ்யோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹானியே தெஹ்ரானில் கொல்லப்பட்டமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என கமெய்னி கூறியதாக அந்தப் பத்திரிகை அறிவித்துள்ளது.
நேற்று ஈரானின் தேசிய பாதுகாப்பு சபை அவசரமாக கூடியிருக்கிறது. இந்தக் கூட்டத்தில்இ ஈரானிய ஆன்மீகத் தலைவரின் உத்தரவு வெளியானதாக புரட்சிகர காவற்படையின் இரு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள். லெபனான் தலைநகரில் தமது சிரேஷ்ட படைத்தளபதியொருவர் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா இயக்கம் ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்நகரின் சிதைந்த கட்டடமொன்றில் படைத்தளபதி புவாட் சுக்ரியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்தக் கட்டடத்தின் மீதான தாக்குதலில் இரு சிறுவர்கள் அடங்கலாக மேலும் நான்கு பேரும் பலியாகி இருந்தார்கள். புலனாய்வுத் தகவல்களைப் பயன்படுத்திஇ புவாட் சுக்ரியை இலக்கு வைத்து தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்தது. கோலான் மேட்டு நிலத்தில் 12 பேரை பலி கொண்ட ரொக்கட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்இ இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறியது.