மியன்மார் செல்வதைத் தவிர்க்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்
மியன்மரில் சட்டவிரோதமான முறையில் தொழிலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு பாதுகாப்பு அமைச்சு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள், ஆள்கடத்தலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களால் மியன்மாரில் தொழிலுக்காக சென்ற இலங்கையர்கள் குழுவொன்று அந்நாட்டு பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சைபர் குற்றவியல் முகாமில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் இவ்வாறான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இருந்த போதிலும், 89 இலங்கையர்கள் சட்டவிரோதமாக மியன்மாருக்கு பணிக்குச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடும் முயற்சிக்குப் பின்னர் 40 பேரை விடுவிக்க முடிந்ததுள்ளது. ஆனால், மியன்மாரின் சைபர் குற்றவியல் முகாமில் மேலும் 54 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை விடுவிக்க மியன்மார் அரசாங்கத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
எனவே, இவ்வாறான மனித கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பாதுகாப்பு அமைச்சு அல்லது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.