இஸ்ரேலுக்கு இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதாக அமெரிக்கா தெரிவிப்பு.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொய்ட் ஒஸ்டின், இஸ்ரேலுக்கான இராணுவ உதவிகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளார். பல்வேறு அவசரநிலைகளுக்கு அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை செய்யப்பட்டு சில நாட்கள் கடந்துள்ள நிலையில், அமெரிக்காவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, காஸா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய மற்றொரு வான்வழி தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலை மற்றும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு அளித்து வருகின்றமை தாக்குதல்கள் அதிகரித்துள்ளமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான யுத்தத்தினால், காஸா பகுதியில் உள்ள மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதினமான கட்டடங்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.