கண்டி எசல பெரஹராவின் முகூர்ந்தகால் நடும் சடங்கு நாளை
வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரவிற்குரிய முகூர்ந்தகால் நடும் சடங்கு நாளை அதிகாலை 4.10இற்கு கூடியுள்ள சுபவேளையில் ஆரம்பமாகும் என தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெயல தெரிவித்துள்ளார்.
முகூர்ந்த கால் நடும் சடங்கை தொடர்ந்து ஐந்து நாட்களும் தலதா மாளிகை வளாகத்திலுள்ள தேவாலங்களில் பெரஹராக்கள் உள்வீதி வலம் வரும். தொடர்ந்தும் கும்பால பெரஹர எதிர்வரும் சனிக்கிழமையும் ரந்தோலி பெரஹர 15ஆம் வியாழக்கிழமையும் ஆரம்பமாகும்.
எதிர்வரும் 19ஆம் திகதி ஆவணி பௌர்ணமி அன்று இறுதி வீதி உலா நடைபெறும். மறுநாள் நீர்வெட்டைத் தொடர்ந்து இடம்பெறும் பகல் பெரஹரவுடன் கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹர நிறைவு பெறவுள்ளது.