பங்களாதேஷின் இடைக்காலத் தலைவராக முஹம்மது யூனுஸ்
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக முஹம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் நீண்டகால அரசியல் எதிரியான, நோபல் பரிசு பெற்ற யூனுஸுக்கு 84 வயதாகிறது.
பல வார ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் ஷேக் ஹசீனாவினா நாட்டை விட்டு வெளியேறியதன் மறுநாள், இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டார்.
நுண்கடன் பயன்பாட்டில் பேராசிரியர் யூனுஸின் பங்களிப்பு நாட்டு மக்களால் பாராட்டப்பட்டது.
எவ்வாறாயினும் ஷேக் ஹசீனா இவரை ஒரு பொது எதிரியாகக் கருதியதுடன், உள்ளூர் நீதிமன்றம் ஒன்று அவருக்கு சிறைத்தண்டனை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.