இலங்கை கிரிக்கெட் அணியின் இடதுகை பந்து வீச்சாளர்மீது குற்றச்சாட்டு
இலங்கை கிரிக்கெட் அணியின் இடதுகை பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம சர்வதேச கிரிக்கெட் பேரவையின் குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.
கிரிக்கெட் பேரவையின் ஊழலுக்கு எதிரான பிரிவுகளின் கீழ் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
2021ம் ஆண்டு இடம்பெற்ற லங்கா பிரிமியர் லீக் சுற்றுத்தொடரின் போது ஊழலை மேற்கொள்ளுமாறு தம்மை அணுகிய நபர் பற்றி தாமதமின்றி அதிகாரிகளுக்கு அறிவிக்கத் தவறினார் என்பது அவருக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டாகும்.
உரிய தரப்பால் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளையும் அவர் அழித்துவிட்டதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி 14 நாட்களுக்குள் அவர் பதிலளிப்பது அவசியமாகும்.
பிரவீன் ஜயவிக்ரம இந்தக் காலப்பகுதியில் ஜெப்னா கிங்ஸ் அணிக்கு லங்கா பிரிமியர் லீக் போட்டியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.