ட்ரம்ப் Vs கமலா: ஜனாதிபதி வேட்பாளர்கள் நேரடி விவாதத்திற்கு இணக்கம்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப், கமலா ஹரிஸ் ஆகியோர் முதலாவது நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த விவாதம் செப்டெம்பர் மாதம் 10ம் திகதி இடம்பெறும் என்று யுடீஊ தொலைக்காட்சி அலைவரிசை அறிவித்திருக்கிறது.
மூன்று விவாதங்கள் நடத்தப்பட வேண்டுமென்று தாம் எண்ணுவதாக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலதிக இரண்டு விவாதங்களும் பொக்ஸ் நியுஸ், Nடீஊ ஆகிய தொலைக்காட்சிகளின் ஊடாக ஒளிபரப்பப்பட வேண்டுமென்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த விவாத அழைப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக அமெரிக்க உப ஜனாதிபதியும், வேட்பாளருமான கமலா ஹரிஸ் அறிவித்துள்ளார்.