மக்களை வறுமையில் இருந்து விடுவிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி திட்டம்.
கிராமிய மக்களை வறுமையில் இருந்து விடுவிப்பதற்கான நாடொன்று உருவாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக மக்களுக்கு பத்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
2048ஆம் ஆண்டு வரை மக்கள் வறுமையில் இருக்க முடியாது. தேசிய மக்கள் சக்தியின் கெப்பித்திகொல்லேவ பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கிராமிய மக்களின் வறுமையை ஒழிக்க கல்வியை பிரபலப்படுத்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்கள் தொடர்பில், விசாரணை நடத்துவதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் அதிகாரிகளை நியமிக்க எதிர்பார்ப்பதாகவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.