அனைவரும் செல்வத்தை உருவாக்கக்கூடிய நாட்டை உருவாக்குவதே தமது நோக்கம் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
“பாரம்பரிய வேலைகள் மற்றும் நலன்புரி அமைப்புகளுக்கு அப்பாற்பட்ட செல்வத்தை அனைவரும் உருவாக்கக்கூடிய சூழலை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். அந்தச் சூழலை உருவாக்க இந்த நாடு தொழில் முனைவோர் நாடாக இருக்க வேண்டும் என்கிறோம். வேறு எந்த வேட்பாளரும் இதுவரை இதுபோன்ற தர்க்கரீதியான திட்டத்தை முன்வைக்கவில்லை. அதே பாரம்பரியக் கொள்கைகளைத்தான் சொல்கிறார்கள். குறுந்தொழில்முனைவோர் முதல் பெரிய தொழில்முனைவோர் வரையிலும், சிறிய, ஏழ்மையான குடும்பத்தில் இருந்து பணக்காரர் வரையிலும் நாம் விரும்பும் புதிய ஒன்றை ஆக்கப்பூர்வமாகச் செய்வதன் மூலம், ஒரு நாடாக இந்தச் செல்வத்தை எவ்வாறு உருவாக்குவது, பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவது எப்படி? இந்த நாட்டில் இது அனைத்து இலங்கையர்களையும் கவரக்கூடியதாக இருக்கும் என நான் கருதுகின்றேன்.”
காலி பிரதேசத்தில் அனைத்து சமய வழிபாடுகளையும் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே திலித் ஜயவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.