போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஆர்வம் காட்டுவதில்லையென குற்றச்சாட்டு.
காசாவில் நிலவும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் பிரதமர் பெஞ்மின் நெத்தன்யாகு ஆர்வம் காட்டுவதில்லை என்று அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யுத்தத்தினால் இடம்பெறும் பாதிப்புக்களைக் குறைக்க பிரதமர் நெத்தன்யாகு ஆர்வம் காட்டுவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதியின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் பிபிசி உலக சேவைக்கு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கனுக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவிற்கும் இடையில் 3 மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இது பற்றிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
காசா யுத்தத்திற்கு முடிவுகட்டுமாறு அமெரிக்கா, எகிப்து, கட்டார் ஆகிய நாடுகள் கூட்டாக இஸ்ரேலிடமும் ஹமாஸ் அமைப்பிடமும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.