ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து முக்கிய வேட்பாளர்களும் தமது சொத்துப் பிரகடனங்களில் பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்து வருமான வரி செலுத்தாமல் கறுப்புப் பொருளாதாரத்தின் அங்கமாகிவிட்டதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவிக்கிறார்.
“ஜனாதிபதி வேட்பாளர்களின் மாத வருமானத்தைப் பார்த்தேன். வருத்தமாக உணர்ந்தேன். மிகவும் பாவம். மாதம் இரண்டு இலட்சம் ரூபாயில் வாழ்கின்றனர். அவர்கள் வாழ முடியாத அளவு வாழ்கிறார்கள். நான்கைந்து பேரையும் ஒரே பையில் போட்டுவிட்டு ஒன்று அல்லது ஐந்து செம்பு காசு கூட வரியாக செலுத்தவில்லை என்று சவால் விடுகிறேன்.
இரண்டு இலட்சம், மூன்று இலட்சம் ரூபாயில் வாழ்வதாகச் சொன்னவர்கள் எல்லாம் கறுப்புப் பொருளாதாரத்தில் திருடர்கள் கூட்டம். எங்கள் தலைவர் விரைவில் ஓய்வு பெறும்போது, தனிப்பட்ட முறையில் அவருக்கு பணிக்கொடை வழங்குவோம் என்று நம்புகிறேன். பாவம் இரண்டு லட்சத்தில் வாழ்வது எப்படி? இவை நகைச்சுவைகள்” என அனுராதபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய திலித் ஜயவீர தெரிவித்தார்.